அண்ணா சாலையில் பைக் சாகசம் செய்த யூடியூப் பிரபலம்.. அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வைத்த நீதிமன்றம்

By vinoth kumar  |  First Published Oct 3, 2022, 12:17 PM IST

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாதத்தை சேர்ந்த  கோட்லா அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது. 


சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாதத்தை சேர்ந்த  கோட்லா அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது. அதன்படி பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டையில் நின்று கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அலெக்ஸ் பினோய் விநியோகம் செய்து வருகிறார்.

கடந்த 8-ம் தேதிசென்னை அண்ணாசாலையில் இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் அபாயகரமான பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து R-4 பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இதுபோல தண்டனை கொடுத்தா பைக் ரேஸ் பத்தி இளைஞர்கள் யோசிக்கவே மாட்டாங்க.. சாட்டையை சுழற்றிய நீதிபதி.!

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஐதராபாதத்தை சேர்ந்த பிரபல பைக் சாகச வீரர் கோட்லா அலெக்ஸ் பினோய் அன்றை தினம் சென்னை வந்திருந்ததாகவும், அவருடன் சேர்ந்து நாங்களும் சாகசத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  அலெக்ஸ் பினோய் என்ற நபரை தேடிவந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்ஜாமீன் வழங்கி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். 

அதில், எந்த சாலையில் அவர் பைக் சாகசத்தில் ஈடுபட்டாரோ அதே சாலை சிக்னலில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் துண்டு பிரசுரம் வழங்க வேண்டும். திங்கட்கிழமை காலை  9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் வழங்க வேண்டும்.

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் செவ்வாய் முதல் ஞாயிற்று கிழமை வரை காலை 8 மணி முதல் 12 மணி வரை பணியாற்ற வேண்டும். துண்டு பிரசுரங்கள் அச்சிடுவதற்கான செலவை மனுதாரரே ஏற்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. 

இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று காலை 9.30 மணி முதல் பினோய் அண்ணாசாலை தேனாம்பேட்டை சிக்னலில் சாலை பாதுகாப்பை மதிக்க வேண்டும், பைக் சாகசங்கள் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பலகையை வைத்து கொண்டு வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க;-  ஆபாச பேச்சு, இடுப்பில் கிள்ளி பாலியல் தொல்லை.. இளம்பெண்ணை ஒரு நைட்டுக்கு கூப்பிட்ட ஓனர் கைது..!

click me!