நீதிமன்றம் சொன்னால் நாங்கள் நிற்க வேண்டுமா? நடத்துநரின் ஆணவ பேச்சால் பயணிகள் அதிர்ச்சி

Published : Oct 04, 2022, 07:46 PM IST
நீதிமன்றம் சொன்னால் நாங்கள் நிற்க வேண்டுமா? நடத்துநரின் ஆணவ பேச்சால் பயணிகள் அதிர்ச்சி

சுருக்கம்

நாகர்கோவில், திருநெல்வேலி வழித்தடத்தில் தெற்கு வள்ளியூர் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், பேருந்தை உரிய இடத்தில் நிறுத்தாமல் பயணியை 1 கி.மீ. தள்ளிச் சென்று இறக்கி விட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மார்க்கத்தில்  சூப்பர் பாஸ்ட் சர்வீஸ்(SFS)  என்ற பெயரில் 564, 565 பேருந்துகள் இயக்கப்பட்டு  வருகின்றன. இந்த மாதிரி ஆங்கில எழுத்தில் பேருந்து இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனிடைய வள்ளியூருக்கும், பணங்குடிக்கும் இடைப்பட்ட ஊரான தெற்கு வள்ளியூர் நான்கு வழி சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் இந்த வகையான பேருந்துகள் முறையாக நின்று செல்வதில்லை எனக்கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் நம்பிராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். 

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா; வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்த வழக்கின் தீர்ப்பானது கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது. அதில் அனைத்து பேருந்துகளும் தெற்கு வள்ளியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ராதாபுரம் தாசில்தார் வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்துகள் முறையாக தெற்கு வள்ளியூரில் நின்று செல்கிறதா என கண்காணிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சேலத்தில் குட்கா விற்ற இந்து முன்னணி தலைவர் கைது

இதனிடையே இன்று பேருந்தில் ஏறிய போது நடத்துநர் அங்கெல்லாம் நிற்க மாட்டேன் என கூறி திமிராக  பேசி உள்ளார். மேலும் உயர் நீதிமன்ற ஆணை இருக்கிறது என கூறியும் அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் பயண சீட்டு தராமல் பேருந்து நிறுத்தத்தை தாண்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கொண்டு இறக்கிவிட்டு சென்றுள்ளார். ஏற்கனவே நேற்று குமரி மாவட்டத்தில் நடத்துநர் ஒருவர் புகை பிடித்துக் கொண்டே பயணியிடம் பயண சீட்டு வழங்கிய சம்பவம் அரங்கேரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விடாமல் மழை ஊத்தப்போகுதா? சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!