கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran S  |  First Published Oct 4, 2022, 9:23 PM IST

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். 58 வயதான இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ், பிரவீன் ராஜ், தாவீது, ஈசாக், தெர்மஸ் உள்பட 10க்கும் மேற்பட்டோருடன் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்திருந்தனர். பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர்.

இதையும் படிங்க: விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்பது உண்மையில்லை… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!

Tap to resize

Latest Videos

அப்போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 6 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சார்லஸ், 6 பேரையும் சடலமாக மீட்டனர். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (3.10.2022) காலை சுமார் 9 மணியளவில், ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம்.

இதையும் படிங்க: நீதிமன்றம் சொன்னால் நாங்கள் நிற்க வேண்டுமா? நடத்துநரின் ஆணவ பேச்சால் பயணிகள் அதிர்ச்சி

மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (வயது 38), பிருத்விராஜ் (வயது 36), தாவீதுராஜா (வயது 30), பிரவீன்ராஜ் (வயது 19), ஈசாக் (வயது 19) மற்றும் செல்வன். அண்டோ கெரிமஸ் ரவி ஆகிய ஆறு பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!