சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்... - நாளை முதல் புதிய முறை அறிமுகம்...!

 
Published : Sep 25, 2017, 07:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்... - நாளை முதல் புதிய முறை அறிமுகம்...!

சுருக்கம்

Students are not required to get a police complaint to get the original original certificates and if the apparatus is attached to the drivers license and can apply for a copy of the certificate

தொலைந்த அசல் சான்றிதழ்களை பெற மாணவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தேவையில்லை எனவும்,  ஆதார் ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்வி நிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். 

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் 

அவ்வாறு செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு சான்றிதழ்களை பெற முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.
இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும். பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

சான்றிதழ் படித்த ஆண்டின் 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி மற்றும் கல்லூரி தலைமையிடம் பெற முடியும்.

இந்நிலையில் இந்த நடைமுறைகளை தமிழக அரசு தற்போது எளிமையாக்கி உள்ளது. அதாவது தொலைந்த அசல் சான்றிதழ்களை பெற மாணவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தேவையில்லை எனவும்,  ஆதார் ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்வி நிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். 

இந்த எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெரும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி