
"சவுபாக்யா யோஜனா திட்டம்" தொடங்கி வைத்தார் மோடி.
தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவையொட்டி "சவுபாக்யா யோஜனா திட்டம்" என்ற புதிய மின்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இவர் பாரதிய ஜனதாவின் முந்தைய அரசியல் அமைப்பான ஜன சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். அவருடைய பிறந்தநாளான இன்று இந்த திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்
அதாவது இந்த திட்டமானது என்ன சொல்கிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்பது தான். அதாவது ஏழை எளிய மக்கள் முற்றிலும் பயன்பெறும் விதத்தில்,. இந்த திட்டத்தின் மூலமாக பல முக்கிய அம்சங்களை மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தால் மக்கள் பெரும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்
பலன்கள்
2018 ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என மோடி தெரிவித்துள்ளார்
16,320 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு சார்பாக 60 சதவீதம்,
மாநில அரசு -10 சதவீதம்,
30 சதவீதம் கடன்
இந்த புதிய திட்டத்தில் ரூ.500 செலுத்தி புதிய மின் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஐநூறு ரூபாயையும் 10 மாத தவணையாக செலுத்தும் வசதியையும் கொண்டுள்ளது. அதாவது மாதம் தோறும் ரூ.50 செலுத்தி. 10 மாதத்திற்குள் தவணையை முடித்துக்கொள்ளலாம்
மற்ற பலன்கள் என்ன ?
படிப்பு
மருத்துவ வசதி
பாதுகாப்பு வசதி
கம்யூனிகேஷன் வசதி
சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் இந்த திட்டத்தின் மூலமாக மக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.