
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு.
ஆனால் நடிகர் சங்கம் காலம் தாழ்த்தவே தமிழக அரசே முன்வந்து சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனிடையே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி சிவாஜி மணிமண்டத்தில் அமைத்தது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் நீண்ட நாட்களாக திறப்பு விழா குறித்து தமிழக அரசு வாய்திறக்காமல் இருந்தது.
இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சிவாஜியின் பிறந்த நாளன்று திறக்கப்படும் மணிமண்டப திறப்பு விழாவுக்கு திரைலகினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.