
குடை எடுக்க மறக்காதீர்..! பிச்சிக்கிட்டு பெய்யபோகுது "பேய்மழை"...!
தமிழகத்தில் தொடர்ந்து ஒரு மாத காலமாகவே, ஆங்காங்கு மிதமான மழையும், பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது .
இதன் காரணமாக எரி குளம், அணைகள் என அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த ஆண்டு பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக,அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வடா தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், பொதுவாகவே மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ஜூன்1 முதல் செப்டம்பர் 25 வரை
இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் மட்டும் பெய்த மழையின் அளவு 39 செ.மீ , இந்த மழையின் அளவு சென்ற ஆண்டோடு ஒப்பிடும் போது, 31 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை,விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், பொதுவாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமமாக, எந்த நேரத்திலும் மழை வரலாம் என்பதால் வெளியில் செல்லும் போது குடையுடன் செல்வது நல்லது