
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்பட்டதையடுத்து தண்டையார்பேட்டையில் 2.5 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மணிமேகலை என்பவரது பெண் குழந்தை சிலரால் கடத்தப்பட்டது. அந்த குழந்தையை இரண்டு பெண்கள் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடத்தல் பெண்களையும் சேலத்தில் போலீசார் கண்டு பிடித்து அவரகளிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.
அதன்படி தற்போது சென்னை தண்டையார் பேட்டையில் ஆண் குழந்தை ஒன்று கடத்த்ப்பட்டுள்ளதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவரது 2.5 வயது ஆண் குழந்தை முகமது ஷாத் , இன்று மதியம் 12 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து இலியாஸ் மகனை தேடி வெளியே வந்தார். அப்போது அவரது மகன் மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இலியாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.