படிக்க சொன்னதால் வீட்டை விட்டு ஓடிய மாணவன்.. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மீட்பு..மகனை கட்டிப்பிடித்து கதறிய தந்தை

Published : Oct 14, 2022, 04:58 PM IST
படிக்க சொன்னதால் வீட்டை விட்டு ஓடிய மாணவன்.. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மீட்பு..மகனை கட்டிப்பிடித்து கதறிய தந்தை

சுருக்கம்

திருவாரூர் அருகே படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால், மனமுடைந்து வீட்டை விட்டு ஓடி சென்ற மாணவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். விறகு வியாபாரம் செய்து வரும் இவருக்கு மாதேஷ் எனும் ஒரு மகன் உள்ளார். அரசு உதவிப்பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாதேஷ், படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அவரது பெற்றோர் மாதேஷை தொடர்ந்து தீட்டி வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் படிக்க விருப்பமில்லாமல் இருந்த மாணவன் மாதேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளார். 

மேலும் படிக்க:Deepavali: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 % தீபாவளி போனஸ் அறிவிப்பு.. முழு விவரம்..

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து திருவாரூர் காவல்நிலையத்தில் மகனை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாதேஷை தேடி வந்துள்ளனர். இதனிடையே மாதேஷ் புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்துள்ளார். அது இளவங்கார்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளது. இதுக்குறித்து அறிவழகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க:Viral video : நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்!

அதில் மாதேஷ் மும்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை விரைந்த போலீசார், மாணவன் மாதேஷை மீட்டனர். படிக்க சொன்னதால் வீட்டை விட்டு ஓடிப்போன மகனை ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த தந்தை, கட்டிப்பிடித்து கதறி அழுதார். 

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி