ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப டேஞ்சர்.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் இனி ஆப்புதான்.. தமிழக அரசு எச்சரிக்கை!

By vinoth kumar  |  First Published Apr 26, 2024, 8:05 AM IST

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் பகுதியில் ஸ்மோக் பிஸ்கட் ஒன்றை சிறுவன் ஆர்வத்துடன் வாங்கி உட்கொண்ட அடுத்த சில நிமிடங்களிலேயே வலியால் துடிக்கிறான். பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் திரவ நைட்ரஜன் நேரடியாக கலந்து உணவு பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் பகுதியில் ஸ்மோக் பிஸ்கட் ஒன்றை சிறுவன் ஆர்வத்துடன் வாங்கி உட்கொண்ட அடுத்த சில நிமிடங்களிலேயே வலியால் துடிக்கிறான். பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த ஸ்மோக் பிஸ்கட்களை சாப்பிட வேண்டாம் என பலரும் எச்சரிக்கத் தொடங்கினர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: உயிருக்கு எமனாகும் ஸ்மோக் பிஸ்கட்! டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை! உணவு பாதுகாப்புத்துறை!

ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம். திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது. ஆகையால் இதை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.

இதையும் படிங்க:  சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்! எந்த பகுதியில் தெரியுமா?

மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011 இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!