ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுவதுமாக 'சீல்'; மொத்தமாக போலீஸின் கட்டுப்பாட்டில் வந்தது...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 14, 2018, 12:20 PM IST
Highlights

ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்து வாசல்களும் பூட்டப்பட்டு ஆலை முழுவதுமாக 'சீல்' வைக்கப்பட்டது. 

ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்து வாசல்களும் பூட்டப்பட்டு ஆலை முழுவதுமாக 'சீல்' வைக்கப்பட்டது. ஆலை மொத்தமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்த தகவலை தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவிட்டதன்படி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இரசாயனங்கள் உள்பட பல்வேறு பொருட்களை வெளியேற்றும் பணியை நிறுத்திவிட்டோம். ஆலையில் தற்காலிகமாக பணியாற்றி வந்த தொழிலாளர்களையும் வெளியேற்றிவிட்டோம்.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக ஆலையின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டு முழுமையாக 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. ஆலையில் இருந்து எந்தப் பொருட்களும் வெளியேற்றப்படவில்லை" என்று உறுதியாக கூறிய ஆட்சியர் "ஆலை முழுவதும் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றும் "ஆலை தரப்பில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இதுவரை யாரும் அனுமதி கேட்கவில்லை" என்றும் தெரிவித்தார்.

மேலும், "ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு மூடியுள்ளது. எனவே, ஆலை தரப்பில் நிர்வாகப்  பணிகளை மேற்கொள்ள கோரிக்கை வைத்தாலும் இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து அரசு என்ன சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

"தமிழக அரசுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். அதன்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும். 

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஏற்கனவே தேவையான தகவல்கள் உள்ளன. தேவைப்பட்டால் மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைக்கப்படும்" என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

click me!