
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் உருவம் பொறித்த தபால் தலை வெளியீடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் உருவம் பொறித்த தபால் தலை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார் தலைமைத் தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் எம். கண்ணன் கலந்துகொண்டு, மாணவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகளை வெளியிட்டார்.
இதில், மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இரா. பாலு, மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) எஸ்.எம். ஆரிப், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லயன்ஸ் கிளப் ஆஃப் நாகை போர்ட் டவுன் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.