
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
பரபர அரசியல் சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்தல் முடிவுகளை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளாத நிலையில், தி.மு.க.செயல்தலைவரும்., தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக மாணாக்கர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.