தமிழகத்தில் ரூ.2500 கோடியில் முதலீடு.!1000 பேருக்கு வேலைவாய்ப்பு-ஹபக் லாய்டு நிறுவனத்தோடு ஸ்டாலின் ஒப்பந்தம்

By Ajmal Khan  |  First Published Feb 1, 2024, 12:44 PM IST

உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு மிகவும் பெரும் துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள்,

முதன் முறையாக புதிய முயற்சி! QRcodeஐ ஸ்கேன் செய்தால் முதல்வர் ஸ்டாலினே அரசின் திட்டங்களை விடியோவாக விவரிப்பார்

தொழில் முதலீட்டாளர்களோடு சந்திப்பு

சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  Jesper Kanstrup மற்றும் இயக்குநர்  Albert Lorente ஆகியோர்  தமிழ்நாடு முதலமைச்சர்  31.1.2024 அன்று சந்தித்துப் பேசினார்கள்.

2500 கோடிக்கு ஒப்பந்தம்

இந்த சந்திப்பின்போது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு. தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அபர்ட்டிஸ் நிறுவனத்திற்கு அழைப்பு

இதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான Laura Berjano. International and Institutional Relations Head  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது. இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக அரச வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஜனவரி மாதத்தில் 84 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்... 12 ஆம் தேதி மட்டும் இத்தனை லட்சம் பேர் பயணமா.?

click me!