எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மீனவ குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. மீனவர்கள் தங்களது வாழ்வாதரத்திற்காக நடுக்கடலில் சென்று மீன் பிடிக்கின்றனர். ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இதனால் மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதோடு படகுகளும் வீணடிக்கப்படுகிறது. மேலும் தங்களது எல்லைப்பகுதியில் முதல் முறை கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். இரண்டாவது முறையாக சிக்கும் மீனவர்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கும் வகையில் இலங்கை அரசு சட்டம் இயற்றியுள்ளது.
மீனவர்கள் குடும்பம் கண்ணீர்
இதனால் இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் வருடக்கணக்கில் அடைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று முன் தினம் தான் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ளது.
மீனவர்களை மீட்க கோரிக்கை
மேலும் மீனவர்களின் 4 நாட்டுப்படகுகளையும் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 25 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கைது சம்பவத்தால் ராமேஸ்வரம் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
Cylinder Price : குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?