மீண்டும் கள்ளச்சாராயம்... மூடி மறைக்கும் திமுக அரசு- ஸ்டாலின் பதவி விலகியே ஆகனும்- இறங்கி அடிக்கும் எடப்பாடி

By Ajmal KhanFirst Published Jul 1, 2024, 6:05 AM IST
Highlights

ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது "இனி இதுபோல் நடக்காது" என்று திமுக முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இனியும் ஸ்டாலின்  முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லையென கூறியுள்ளார். 

மீண்டும் கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஆனைமலை பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வந்த நிலையில்,

Latest Videos

அதனை திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

OPS : மதுவில் கிக் இல்லையா..! கள்ளச்சாரயம் குடிப்பதை நியாயப்படுத்துவதா.? துரைமுருகனை விளாசும் ஓபிஎஸ்

முதல்வர் பதவி விலகனும்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த விடியா திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது "இனி இதுபோல் நடக்காது" என்று விடியா திமுக முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில்,

இனியும் ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை.  தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று விடியா திமுக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

டாஸ்மாக் மது விற்பனையை தனியாரிடம் கொடுக்க வேண்டும்: அண்ணாமலையின் ஐடியா எப்படி இருக்கு?

click me!