Tamil Nadu Agriculture Budget 2023: விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 21, 2023, 12:51 PM IST
Highlights

தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதிலும், குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதிலும், குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு. 2022-23 அரவைப் பருவத்தில், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய்க்கு மேல் கூடுதலாக 195 ரூபாய் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 253 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம்

கரும்பில் உயர் மகசூல், அதிக சர்க்கரைக் கட்டுமானம் அடைந்திடவும். கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவை குறைக்கும் நோக்குடனும், உயர் விளைச்சல், உயர் சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட வல்லுநர் விதைக்கரும்பு. பருசீவல் நாற்றுக்கள் போன்றவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏழு கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் கரும்புத் தளங்கள் சிமெண்ட் கான்கிரீட் தளங்களாக மேம்படுத்தப்படும். இதற்கென வரும் ஆண்டில் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சர்க்கரை ஆலைக் கழிவு மண்ணில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்

தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!