TN Agriculture Budget: 200 இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி.. வேளாண் பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு.!

By vinoth kumarFirst Published Mar 21, 2023, 12:06 PM IST
Highlights

மக்களின் தொன்மை மிகுந்த வேளாண் பணியில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் உழைப்புத் திறனை மேம்படுத்தி, வேளாண் பணிகளை எளிதில் செய்ய ஏதுவாக சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். 

வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார். அதில், மக்களின் தொன்மை மிகுந்த வேளாண் பணியில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் உழைப்புத் திறனை மேம்படுத்தி, வேளாண் பணிகளை எளிதில் செய்ய ஏதுவாக சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். குறிப்பாக, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 30.000 தொகுப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல்

வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற கல்வியைப் பயன்படுத்தி சொந்தக் காலில் நிற்கவும், தொழில் முனைவோராகப் பரிணாம வளர்ச்சியடையவும், வரும் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!