TN Agriculture Budget 2023 : ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

By Raghupati R  |  First Published Mar 21, 2023, 11:41 AM IST

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட் 2023இல் அறிவிக்கப்பட்டுள்ளது.


2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

Latest Videos

2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது.நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு.

இதையும் படிங்க..Tamil Nadu Budget 2023-24 Highlights : தமிழ்நாடு பட்ஜெட் 2023ன் முக்கிய அம்சங்கள் இதோ !!

கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு. 2504 ஊராட்சிகளில் ரூ230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும். 

15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.  கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையும் படிங்க..இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?

click me!