பொங்கல் சிறப்பு ரயில்; 10 நிமிடத்தில் விற்பனையான டிக்கெட்கள், முன்பதிவு செய்ய மேலும் ஒரு வழி

By Velmurugan sFirst Published Dec 29, 2022, 11:51 AM IST
Highlights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்புக் கட்டண ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை செய்யும் நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு சிரமத்தை குறைக்கவும், தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டன. 

பொங்கல் பண்டிகை; நெல்லை, நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் விவரங்கள்

தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில், கொச்சுவேலி - தாம்பரம், எர்ணாகுளம் - எழும்பூர், தாம்பரம் திருநெல்வேலி இடையே சிறப்பு கட்டண ரயில்கள் வருகின்ற 12ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பொதுவாக ரயில் முன்பதிவு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கும். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் சிறப்புக் கட்டண ரயில்கள் என்பதால் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 5 ரயில்களுக்கான முன்பதிவும், தொடங்கப்பட்ட 10 நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது.

ரத்தத்தில் படம் வரைவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் - அமைச்சர் எச்சரிக்கை

சென்னை எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இதற்கான சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், கவுண்டர்களில் அதிகளவில் கூட்டம் இல்லை. இருப்பினும் இணையதளம் வாயிலாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ரயில்களுக்கான தட்கல் முன்பதிவானது வருகின்ற ஜனவரி 11ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

click me!