சென்னையில் 3வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்; 40 பேர் மயக்கம்

By Velmurugan sFirst Published Dec 29, 2022, 11:09 AM IST
Highlights

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ள நிலையில் 40 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரத்தத்தில் படம் வரைவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் - அமைச்சர் எச்சரிக்கை

மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆசிரியர்களின் கோரிக்கையானது அரசின் நிதிநிலை தொடர்புடையது. இருப்பினும் ஆசிரியர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்”.

பொங்கல் பண்டிகை; நெல்லை, நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு

இருப்பினும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ள நிலையில், சுமார் 40 ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சலலப்பு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.

click me!