ரத்தத்தில் படம் வரைந்து விருப்பமானவர்களுக்கு பரிசாக வழங்குவது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பழக்கத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தற்போது ஒரு கெட்ட பழக்கம் பிரபலமடைந்து வருகிறது. அதாவது உடலில் உள்ள ரத்தத்தை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் பழக்கம் பிரபலமடைந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை; நெல்லை, நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு
காதலன், காதலிக்கோ, காதலி, காதலனுக்கோ பரிசாக வழங்கி வருகின்றனர். உயிர் வாழ்வதற்கு ரத்தம் மிகவும் பிதானமான ஒன்று. அப்படிப்பட்ட ரத்தத்தை சட்டப்படி தானமாக வழங்கலாமே தவிர்த்து இப்படி வீணாக்கக்கூடாது. இதனை ஒரு சில நிறுவனங்கள் தொழிலாகவே செய்து வருகின்றன. அப்படி ஓவியம் வரைய பயன்படுத்தப்படும் ரத்தம் முறையாக பரிசோதனைக்கு உட்பட்டதா என்று தெரியாது.
ஒருவேளை அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. போன்ற வைரஸ்கள் இருக்கும் பட்சத்தில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சென்னையில் பல்வேறு கடைகளில் இதுபோன்ற வரைபடங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்கு இருந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஊசி, ரத்தம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு தினத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த்; தொண்டர்கள் மகிழ்ச்சி
மேலும் ரத்தத்தால் படம் வரையும் பழக்கத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேலும் இதுபோன்ற பழக்கம் தொடரும் பட்சத்தில் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும். தமிழகத்தில் ரத்தத்தால் படம் வரையும் பழக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.