3 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியூருக்கு போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு.! எந்த எந்த ஊருக்கு தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jun 12, 2024, 7:42 AM IST

முகூர்த்தம்,வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 


3 நாட்கள் தொடர் விடுமுறை

தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் பயணம் செய்யும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுக் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14/06/2024 (வெள்ளிக் கிழமை) 15/06/2024 (சனிக்கிழமை) 16/06/2024 (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்தம்வார விடுமுறை மற்றும் 17/06/2024 (திங்கள் கிழமை ) பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest Videos

Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

சிறப்பு பேருந்து அறிவிப்பு

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14/06/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 545 சிறப்பு பேருந்துகளும் 15/06/2024 (சனிக்கிழமை) அன்று 585 சிறப்பு பேருந்துகளும் 16/06/2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 17/06/2024 (திங்கள் கிழமை) அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எத்தனை பேருந்துகள்.? எந்த எந்த ஊருக்கு.?

மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 14/06/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் 15/06/2024 (சனிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி, திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 10,894 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,957 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 5,926 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். 

சம்பளத்தில் 50% பென்ஷனுக்கு கேரண்டி! புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றும் என்.டி.ஏ. அரசு!

முன் பதிவு செய்துக்கோங்க..

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளமாறு போக்குவரத்துக்கழகம் அறிவறுத்தியுள்ளது. 

click me!