கலவரம் செய்தால் தான் பாஜக வளரும்; சர்ச்சை ஆடியோ இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி நீக்கம் - அர்ஜூன்சம்பத்

By Velmurugan s  |  First Published Jun 11, 2024, 11:18 PM IST

தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஆடியோ வெளியிட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அர்ஜூன் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.


இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான திரு உடையார் அவர்கள் கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரையாடலில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த விவகாரம்; முதல்வர் அவசர ஆலோசனை, நிவாரணம் அறிவிப்பு

Tap to resize

Latest Videos

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் உள் விவகாரங்களில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தலையிடுவது இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். பாஜக மாவட்ட தலைவரோடு தான் நடத்திய உரையாடலை பதிவு செய்து பொதுவெளியில் வெளியிட்டு ஹிந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். 

திண்டுக்கலில் பேக்கரிக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து; ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் - அதிகாரிகள் அதிரடி

எனவே இந்து மக்கள் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது அவர் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும். 90 நாட்களுக்குள் அவரிடம் விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்சி நிர்வாகிகள் யாரும் அவரோடு இணைந்து செயல்பட்டால் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!