மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம்..! தட்டிகேட்டவரை தாக்கிய எஸ்.ஐக்கு அதிரடியாக தண்டனை கொடுத்த எஸ்.பி

Published : Jul 13, 2023, 08:47 AM ISTUpdated : Jul 13, 2023, 08:51 AM IST
மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம்..! தட்டிகேட்டவரை தாக்கிய எஸ்.ஐக்கு அதிரடியாக தண்டனை கொடுத்த எஸ்.பி

சுருக்கம்

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்பதாக புகார் தெரிவத்த  மது பிரியர் தாக்கிய செங்கல்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். 

டாஸ்மாக் மதுபான பாட்டில் விலை

தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக்கடையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. 150 ரூபாய் பாட்டிலுக்கு 160 ரூபாய் வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால் இதனை தமிழக அரசு மறுத்த நிலையில் தற்போதும் டாஸ்மாக் கடையில் கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் உள்ள மதுக்கடையில்  மதுப்புட்டிகளுக்கு அதிகபட்ச விலையை விட ரூ.10 அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக  குற்றஞ்சாட்டிய  ஒருவரை செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா என்பவர் கண்மூடித்தனமாக  தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மது பிரியரை தாக்கிய எஸ்ஐ இடமாற்றம்

டாஸ்மாக் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக ஒருவரை காவல்துறையினர் தாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் மது குடிப்பதற்கு பாதுகாப்பு கொடுத்த தமிழக அரசு தற்போது மது பான விலையை கள்ளத்தனமாக உயர்த்தி விற்பனை செய்யப்படுவது தொடர்பாக புகார் தெரிவித்தவரை காவல்துறையை கொண்டு தாக்குவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியது. மேலும் மது பிரியரை தாக்கிய காவல் அதிகாரிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில்  செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம்..! தட்டிகேட்டவரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்- அன்புமணி ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்