திமுக எம்.எல்.ஏவையே அலறவிட்ட மர்ம கும்பல்..! நிர்வாண வீடியோ அனுப்பி மிரட்டி பணம் பறிப்பு-நடந்தது என்ன.?

By Ajmal Khan  |  First Published Jul 12, 2023, 6:47 PM IST

திமுக எம்எல்ஏவை வீடியோ காலில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல், அதை பதிவு செய்து அருகில் பெண் நிர்வாணமாக இருப்பது போன்று படத்தை இணைத்து பணம் பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆபத்து

தொழில்நுட்ப வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை விட தீய நடவடிக்கைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பணம் பறிக்க திட்டம் போடும் கும்பல் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி முகநூலில் போலியான கணக்கு தொடங்கி பணம் கேட்டு மிரட்டி வருகிறது. அடுத்த கட்டமாக ஓடிபி கேட்டு வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடவும் செய்கிறது.இந்தநிலையில் தற்போது வீடியோ கால் செய்து அந்த வீடியோ பதிவை ரிக்கார்டு செய்து அருகில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சியை இணைத்து பணம் கேட்டு மிரட்டல் தொடங்கியுள்ளது. இது போன்ற வில்லங்கத்தில் திமுக எம்எல்ஏ சிக்கியுள்ளார்.

Tap to resize

Latest Videos

எம்எல்ஏவுக்கு வந்த வீடியோ கால்

தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (48). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்தது.அதனை சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

பணம் பறித்த கும்பல்

அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கில் 2 முறை தலா 5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார்.இதனையடுத்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

முதல் கட்டமாக ராஜஸ்தானில் இருந்து சட்டமன்ற எம்.எல்.ஏ சரவணக்குமாருக்கு அழைப்பு வந்துள்ளது தெரிய வந்தது. உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் உரிய பதிலளிக்க மறுத்து விட்டார்.

இதையும் படியுங்கள்

குழந்தை என்னுடைய ஜாடையில் இல்லை! இது வேற யாருக்கோ பிறந்தது! ஆத்திரத்தில் தந்தை என்ன செய்தார் தெரியுமா?

click me!