கோடை காலத்தை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக கூடுதல் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறைகளை முன்னிட்டு விடுமுறைகளைக் கொண்டாட பலரும் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30ம் தேதிகளிலும் மே மாதம் 7, 12, 21, 28ம் தேதிகளிலும் ஜூன் 4, 11, 18, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
பதவிவெறி பழனிசாமியே வெளியேறு..! இபிஎஸ்க்கு எதிராக போஸ்டர் ஒட்டி தெறிக்கவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதே போன்று மறு மார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஏப்ரல் மாதத்தில் 3, 10, 17, 24 தேதிகளிலும், மே மாதத்தில் 1, 8, 15, 22, 29 தேதிகளிலும், ஜூன் மாதத்தில் 5, 12, 19, 26 தேதிகளிலும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.
சென்னையில் ஆவின் பால் சேவை முடங்கியது..? பொதுமக்கள் அவதி- காரணம் என்ன.?
இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.