கோயில் திருவிழாக்களில் இனி குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

By Narendran S  |  First Published Mar 13, 2023, 12:37 AM IST

தமிழகத்தில் கோயில் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


தமிழகத்தில் கோயில் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகள், குறவன் குறத்தி நடனம் ஆகியவை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் பெரும்பாலான கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன. 

இதையும் படிங்க: தாறுமாறாக பாய்ந்த கார்... சாலையோரம் தூங்கிகொண்டிருந்த 3 பேர் பலி

Tap to resize

Latest Videos

இதனிடயே குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக புகார் எழுந்ததை அடுத்து அதற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குறவன், குறத்தில் ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அதிர்ச்சி.!! 4 மாதங்களுக்கு பிறகு.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் பலி

முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10 ஆம் தேதி இந்த அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!