சென்னையில் ஆவின் பால் சேவை முடங்கியது..? பொதுமக்கள் அவதி- காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Mar 13, 2023, 9:05 AM IST

 சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்கு பால் வரத்து குறைந்து போனதாலும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள் காரணமாகவும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினிற்கான பால் கொள்முதல் கடந்த ஓராண்டு காலமாக 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து போனதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் உற்பத்தி, விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் வெளிமாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று தென்சென்னை பகுதியில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்கு பால் வரத்து குறைந்து போனதாலும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள் காரணமாகவும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பரீட்சை பயமா.? தன்னம்பிக்கையோட எழுதுங்க.! 10,11,12 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரை

ஆவினை மீட்க வேண்டும்

அதனால் அதிகாலை 1.30மணிக்குள் பால் பண்ணையில் இருந்து பாலினை ஏற்றிக் கொண்டு வெளியேற வேண்டிய மொத்த விநியோகஸ்தர்களின் விநியோக  வாகனங்கள் தற்போதைய (காலை 8.00மணி) நிலவரப்படி பால் பண்ணையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மைலாப்பூர், அடையாறு, பெசண்ட் நகர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி, உள்ளகரம், தாம்பரம் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் விநியோகம் செய்ய வேண்டிய சுமார் 1லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக முடங்கியது. அதன் காரணமாக சில்லரை வணிகர்களுக்கு ஆவின் பாலினை வழங்க முடியாமல்  பால் முகவர்களும், ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்களும் அல்லல்பட்டு வருகின்றனர்.  

அதிகாரிகள் அலட்சியம்

வெளி மாவட்டங்களில் நிலவி வரும் ஆவின் பால் தட்டுப்பாடானது தற்போது தலைநகர் சென்னையையும் பாதித்திருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணமான பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்திற்கும், ஆவின் அதிகாரிகளின் மெத்தனப் போக்கிற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அழிவின் விழிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆவினை மீட்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

கோயில் திருவிழாக்களில் இனி குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

click me!