வரும் 2024 ஆண்டு தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், ரத்து செய்யப்படுகிறது.
ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக, வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில் பாதை மற்றும் சைகை (Signal) மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வஉம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இப்போது அதன் முழு விவரங்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்..
வடக்கு ரயில்வேயில் நடைபெறவுள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான முழு விவரம் இதோ...
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651) ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. ஜெனரல் டிக்கெட் விதிகள் எல்லாமே மாறிப்போச்சு..
மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687) ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை!
அதுபோல், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642) ஜனவரி 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652) ஜனவரி 16, 18, 23, 25, 30 மற்றும் பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688) ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.