74 பேருக்கு டிஸைன் டிஸைனா டிமிக்கி... கோடிக்கணக்கில் ஆட்டையைப் போட்ட ஷோபியா... விசாரணையில் திடுக் தகவல்கள்!

 
Published : Jul 25, 2018, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
74 பேருக்கு டிஸைன் டிஸைனா டிமிக்கி... கோடிக்கணக்கில் ஆட்டையைப் போட்ட ஷோபியா... விசாரணையில் திடுக் தகவல்கள்!

சுருக்கம்

Sophia cheating 74 people by lying to offer government jobs

அரசு வேலை வாங்கி தருவதாக  கூறி  74 பேரிடம் இருந்து  பல கோடிரூபாய் அபேஸ் செய்த ஷோபியா என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் உளூந்தூரைச் சேர்ந்தவர் இளந்தீபன். இவர் இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சித்து கொண்டிருந்தார். இதை அறிந்த சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா என்பவர் தான் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காட்டியிருக்கிறார்.

அதனால் 5 லட்சம் கொடுத்தால் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார் ஷோபியா. அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையால் ஷோபியா சொல்வதை உண்மை என்று நம்பிய இளந்தீபன் ரூ. 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட ஒரு வாரத்தில் பணி நியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்தார்.



அந்த ஆணையுடன் இளந்தீபன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகியபோதுதான்  தெரிந்தது அது டூப்ளிகேட் என்று. இதனால் அதிர்ச்சி அடைந்த இளந்தீபன் சிதம்பரம் போலீஸில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இளைஞரிடம் பணத்தை அபேஸ் பண்ணிய ஷோபியாவும் அவரது தாய் ஆரோக்கியசெல்வியும் பல இளைஞர்களிடம் இருந்து பல லட்சங்களை வாங்கிக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. 



இவர்கள் மோசடி செய்ய, கடலூரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த ரவிச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து  பலபேரை எமாற்றி இருக்கிறார்கள். ஷோபியா தலைமறைவான நிலையில் ஆரோக்கியசெல்வியும், ரவிச்சந்திரனும் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.  இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் கடலூர் செம்மண்டலத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஷோபியாவை கைது செய்தனர். அப்போது விசாரணை பல தகவல்கள் கிடைத்தன. ஷோபியா மொத்தம் 74 பேரிடம் இருந்து ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளது தெரியுவந்தது. 



பணம் கொடுப்பவர்களுக்கு பணி நியமன ஆணையை தருவதும் போலி ஆணை என தெரிந்ததும் பணம் கேட்போரை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். ஏமாற்றிய அந்த பணத்தில் ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு  எடுத்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளது தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: கார் விபத்து - நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!