அப்பாவுக்கு இவ்வளவு காஸ்ட்லி கிஃப்ட் கொடுக்கும் ஐடியா வந்தது எப்படி என்பது பற்றி மகன் பாலசிங் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
சைக்கிளில் பேரிச்சம் பழம் விற்று தன்னைப் படிக்க வைத்த தந்தைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பிஎம்டபுள்யூ கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். கோல்டு வாட்ச் ஒன்றையும் கொடுத்து தன் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
கோபிசெட்டிபாளையத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை நடத்துபவர் ஜெகந்நாதன். அவரது மகன் பாலாசிங் தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபுள்யூ காரையும் தங்க ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசளித்துள்ளார். மகனின் அன்புப் பரிசைக் கண்ட தந்தை ஜெகந்நாதன் திகைப்பில் திக்குமுக்காடிப் போய்விட்டார்.
அப்பாவுக்கு இவ்வளவு காஸ்ட்லி கிஃப்ட் கொடுக்கும் ஐடியா வந்தது எப்படி என்பது பற்றி மகன் பாலசிங் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுக்கும் மியா கலிஃபா! பேனரில் சம்பவம் செய்த காஞ்சிபுரம் ரசிகர்கள்!
"அப்பா அவரோ 14 வயசுல வேலைக்குப் போக ஆரம்பித்தார். 10வது பாஸ் ஆக முடியாம போன பிறகு, சைக்கிளில் தெருத்தெருவாகப் போய் பழைய இரும்பு சாமன்களை வாங்கிக்கொண்டு, எடைக்கு ஏற்ப பேரீச்சம் பழத்தைக் கொடுப்பார். தினமும் 20 கி.மீ. இப்படி அலைந்து கடுமையான உழைத்தார்
என்னோட 15 வயசுல அப்பா ஒரு வியாபாரம் செய்ய முடிவு பண்ணி ஒரு கடை வைத்தார். என் அம்மா 22 வருசத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்க. என்னோட 18 வயசுல இருந்து அப்பா தான் என்னையும் தங்கச்சியையும் வளர்த்து ஆளாக்கி இருக்கார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பாலாசிங்.
"இப்படி ஒரு பரிசை தருவான்னு எனக்குத் தெரியாது. என் வாழ்க்கைல இவ்வளவு காஸ்ட்லி காரில் ஏறுவேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. அம்பது வருஷம் முன்னால தினமும் 1 ரூபாய் சேமித்து வைத்து 300 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கினேன். அதை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். பல வசதிகள் வந்தாலும் அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்" என்று சொல்கிறார் ஜெகந்நாதன்.
தமிழுக்கு மரியாதை! பென்ஷன் தொகையை உயர்த்தும் தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?