பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் பண்றேனா – வீரலட்சுமியை விளாசிய சினேகா!

Published : Jul 30, 2025, 11:15 PM IST
veeralakshmi

சுருக்கம்

Sneha criticize Veerlakshmi : நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் உடன் ஏற்பட்ட வாக்குவாதம், மோதல் சம்பவத்திற்கு பிறகு தான் பப்ளிசிட்டிக்கா இப்படியெல்லாம் செய்வதாக பேசிய  வீரலட்சுமியை மநீம மகளிர் அணி மாநில செயலாளர் சினேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் சிறிய கட்சி முதல் பெரிய கட்சி வரையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளரான சினேகா வாடகை ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவருக்கும், சினேகாவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சினேகா மற்றும் ஆட்டோ டிரைவர் பிரசாத் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் இச்சம்பவத்தை வைத்து தமிழர் முன்னேற்றப்படை தலைவரான வீரலட்சுமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சினேகா தனது பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டுள்ளார். நான் ஒரு துணை நடிகை. சினிமா வாய்ப்புக்காக இப்படியெல்லாம் டிராமா செய்கிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சினேகா நான் பப்ளிசிட்டிக்காக இப்படியெலலாம் நடிக்கிறேன் என்றும், நான் ஒரு துணை நடிகை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், எந்தப் படத்தில் என்ன அவர் நடிக்க வைத்திருக்கிறார். எந்த இயக்குநரிடம் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார். நான் கிட்டத்தட்ட்ட 5 ஜெனரேஷனாக சென்னையில் இருக்கிறேன். ஒரு என் ஜி ஓ வேறு நடத்தி கொண்டு இருக்கிறேன். உண்மையில் அவர் தான் இப்போது அரசியல் ஆதாயம் தேடுகிறார். என் மீது புகார் கொடுக்கும் போது முற்றிலுமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு புகார் கொடுக்க வேண்டும். ஒரு சாதாரண மக்களுக்கு என்னைப் பற்றி தவறான புரிதல் ஏற்பட்டுவிடும். என்னுடன் இருந்தவர் வட நாட்டைச் சேர்ந்தவர். நாங்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுகிறோம். அப்படி இப்படி என்று பலவிதமான குற்றசாட்டுகளை முன் வைத்து புகார் அளித்துள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!