
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய்: இதற்கு முன்னால் தமிழக அரசியலில் 1967, 1977 போன்று 2026 தேர்தல் அமைய உள்ளது. 2026 தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுபோம். 1967, 1977ல் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்ற அனைத்து மக்களையும் சந்தித்தனர்.
அண்ணா சொன்ன அதே விஷயத்தை நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. இதைச் சரியாக செய்தாலே போதும். அதனால்தான் இந்தச் செயலியை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்றார்.
இந்நிலையில் அண்ணா "வழியில் செல்வதற்கு இன்னொரு கட்சி எதற்கு தம்பி என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: டிவிகே ஆப் .. இன்று வெளியீடு... தமிழ்நாட்டில் இனி ஆப்பிற்கும் ஆதரவு கிடையாது அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது...
ஓரணியில் தமிழ்நாடு... நாடகத்திற்கு மக்களின் ஆதரவு கிடையாது ஏனென்றால் இன்று இவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகி இருக்கிறார்கள்.....வெற்றி பேரணியில் தமிழ்நாடு... நாடகத்திற்கு ஆதரவு கிடையாது.... ஏனென்றால் இவர்கள் எப்போதுமே மக்களிடம் இருந்து விலகி இருந்தவர்கள்.... "அண்ணா "வழியில் செல்வதற்கு இன்னொரு கட்சி எதற்கு" தம்பி"??? என கேள்வி எழுப்பியுள்ளார்.