#BREAKING : நெல்லை ஆணவக் கொலை வழக்கு! தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

Published : Jul 30, 2025, 03:01 PM IST
nellai

சுருக்கம்

திருநெல்வேலியில் கவின்செல்வகணேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவருக்கும், குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரிக்கும் இடையேயான காதல் பிரச்சனையே கொலைக்கு காரணம்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்செல்வகணேஷ். கடந்த 27ம் தேதியன்று. திருநெல்வேலி மாநகரில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இறந்த கவின்செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.396/2025 சட்டப் பிரிவுகள் 296(b), 49, 103(1) BNS உஇ சட்ட பிரிவுகள் 3(1)(r), 3(1)(s), 3(2)(v) ( தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை ஆணவக்கொலை

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது இன்று  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்யும் விதமாக. இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு. குற்றப் புலனாய்வுத்துறை(CB.CID)க்கு மாற்றப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்