Sneham Foundation பெயரை பயன்படுத்தி பணம் வசூல்… பாஜகவை சேர்ந்த நடிகை மீது சினேகன் புகார்!!

By Narendran SFirst Published Aug 5, 2022, 10:27 PM IST
Highlights

பாஜகவை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். 

பாஜகவை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இதுக்குறித்த அவரது புகாரில், Sneham Foundation என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை கடந்த 23.12.2015 முதல் நடத்தி வருகிறேன். மேற்கூறிய அறக்கட்டளையை மத்திய அரசின் வருமான வரித்துறை அங்கிரிக்கப்பட்டு அதற்கு 1244 என்ற சான்றிதழும், u/s 80G 5 ( VI ) வரிவிலக்கும் வழங்கியுள்ளது . மேலும் " Sneham Foundation என்ற பெயரில் PANCARD-ம் உள்ளது. நான் என்னுடைய " Snehan Foundation” மூலம் தமிழ்நாடு முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக , சட்டத்திற்கு உட்பட்டு , எந்தவித புகாருமின்றி தற்போது வரை செய்து வருகிறேன். சமீப காலமாக என்னுடைய அறக்கட்டளை “Sneham Foundation" என்ற பெயரை தவறாக பயன்படுத்தும் சின்னத்திரை நட்சத்திரம் மற்றும் வழக்கறிஞருமான ஜெயலட்சுமி என்பவர் தவறான விலாசம் கொடுத்து இணையதளத்தில் தான் தான் "Sneham Foundation" நிறுவனர் என்றும் "Sneham Foundation" பெயரில் தான் தான் பொது மக்களுக்கு நற்பணி செய்வதாகவும், அதற்கு இணையதளம் மூலம் எனக்கு சொந்தமான "Sneham Foundation" பெயரை பயன்படுத்தி, நிதி வசூலித்ததாக எனக்கு பல புகார்கள் வந்தது.

இதையும் படிங்க: திடீர் என திருமண கோலத்தில் மணமகளாக மாறிய சமந்தா! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. வைரல் போட்டோஸ்..!

பொது மக்களிடம் நிதி வசூலித்து பொதுச் சேவை செய்தால் அதற்கான உரிய கணக்குக்களை நாம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நான் பொது பொது மக்களிடம் பொதுவெளித் தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை. மேற்கூறிய ஜெயலட்சுமி, “Snehan Foundatlon" பெயரை பயன்படுத்தி, நிதி வசூலித்ததாக எனக்கு வருமான வரித்துறையால் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். நானும் பொது தளங்களில் ஜெயலட்சுமி செய்துவரும் மோசடிகளை நான் பார்வையிட்ட போது, அவர் என்னுடைய அறக்கட்டளையின் பெயரில் இணையதளத்தில் தவறான விலாசம் மற்றும் விவரங்களை கொடுத்து பொது மக்களை ஏமாற்றி வருகிறார் என்ற விவரம் எனக்கு தெரியவந்தது.

இதையும் படிங்க: குந்தவையாக மாறி த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் சுருதி..! வேற லெவல் போட்டோஸ்..!

நான் இது தொடர்பாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால் அது விலாசம் தவறென்று தபால் துறை அறிவித்து திருப்பி அனுப்பப்பட்டது. நான் நேரடியாக என்னுடைய மேலாளரை அனுப்பி விசரித்த போது, அந்த ”Snehan Foundation" என்ற என்ற பெயரில் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலாசம் போலியானதென்றும், போலியான விலாசத்தில் என்னுடைய அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொது மக்களை தனியாக சந்தித்து அவர்களை தன் வலையில் வீழ்த்தி பணத்தை பரிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து, பொது மக்களை பாதுகாக்க வேண்டுமென்றும், "Sneham Foundation" பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமி மீது சட்ட நடவடிக்கை கோரியும், மேலும் அந்த போலியான இணைய தளத்தை முடக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஜெயலட்சுமி?

நடிகை ஜெயலட்சுமி பாஜகவை சேர்ந்தவர். ஏற்கெனவே இவர் மீது மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மோசடி புகார் நிலுவையில் உள்ளது. இவர் சின்னத்திரையில் நடிகையாக இருந்தார். வெள்ளித் திரையில் துணை நடிகையாக சில படங்களில் தலைகாட்டியுள்ளார்.

click me!