பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்கள் பிங்க் நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த திட்டங்களில் முதன்மையானது மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் ஆகும். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து மகளிருக்கும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஆட்சிக்கு வந்தபின்னர் பணிபுரியும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள் உள்பட அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்காக , தனியே பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மாநகரம் முதல் கிராமம் வரை பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய திட்டமாகும். இத்திட்டம் மூலம் அன்றாடம் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !
தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெண்களுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் கிளம்பியது. சென்னை மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு, கிரீன் போர்டு, புளு போர்ட், டிஜிட்டல் என பல்வேறு விதமான பேருந்துகள் இயங்குகின்றன. இதில் பல்வேறு குழப்பம் இருப்பதால் இலவச பேருந்துக்கு என்று தனியாக ஒதுக்கீடு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் பொதுமக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவியது.
தற்போது அந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அந்தப் பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு அதாவது, பிங்க் வண்ணம் பூசப்படுகின்றது. இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , நாளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !