அட கடவுளே !! அடி பம்போடு சேர்த்து போடப்பட்ட கழிவு நீர் கால்வாய்.. ஒப்பந்ததாரரை கைது செய்த போலீஸ்..

By Thanalakshmi VFirst Published Aug 11, 2022, 3:27 PM IST
Highlights

வேலூர் மாவட்டம் வீரராகவபுரத்தில் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் சுரேஷ் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

வேலூர் மாநகராட்சியில் சுமார் ரூ.1000கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அனைத்து வார்டுகளிலும் முறையான கழிவு நீர் கால்வாய் மற்றும் பாதாளா சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி அடுத்த 19 வது வார்ட்டில் விஜயராகபுரம் 2வது தெருவில், அடி பம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாயின் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பயன்பாட்டில் இருந்த அடிப்பம்பை மாநகராட்சியின் இந்த செயலால் பயன்படுத்த முடியாத நிலைமையை ஏற்பட்டுள்ளதாக முறையிட்டனர்.

மேலும் படிக்க:இன்று 2 மாவட்டங்களில் கனமழை.. தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை.. வானிலை அப்டேட்

இதற்கு முன்னதாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் கீழ் சாலை நின்றிருந்த இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல், அதனுடன் சேர்த்து சாலை போடுதல், ஜூப்போடு சேர்த்து சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக்கொண்டு வருகிறது வேலூர் மாநகாராட்சி. இதுமட்டுமில்லாமல், ரூ.53 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் ஒழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த அடி பம்போடு சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்திருக்கும் சம்பவம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தற்போது அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் சுரேஷ் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க:அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு.. ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையில் தங்கம் கண்டெடுப்பு

click me!