கோயில் காணிக்கை நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம்.! தங்க முதலீட்டு பத்திரத்தை வழங்கிய முதலமைச்சர்

By Ajmal Khan  |  First Published Aug 11, 2022, 3:02 PM IST

பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட  பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி,தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.


கோயில் தங்க நகை- தமிழக அரசு திட்டம்

2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக. ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு. ஓய்வுபெற்ற  நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜூ  தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

தங்க நகை முதலீடு

இக்குழுவின்முன்னிலையில், பெரியபாளையம், அருள்மிகுபவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு,போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இப்பொன் இனங்களை இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூயதங்கக்கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியின் Revamped Gold Deposit Scheme, 2015 திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் அருள்மிகுபவானியம்மன் திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.46 கோடியே 31 இலட்சம் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற ஆண்டொன்றுக்கு வட்டிவீதம் 2.25%ஆகும். இதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டித்தொகையான ரூ.1.04கோடி இத்திருக்கோயில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 

பத்திரங்களை வழங்கிய முதலமைச்சர்

இந்த  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  தலைமைச் செயலகத்தில். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம். அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, பலமாற்றுப் பொன் இனங்களை மும்பை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை. அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதையும் படியுங்கள்

மகிழ்ச்சியாக விழாவில் பங்கேற்கும் நான்... கவலையோடு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்துள்ளேன்..! மு.க.ஸ்டாலின்
 

click me!