தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்... 6 பேர் படுகாயம்!!

Published : Feb 23, 2023, 09:40 PM IST
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்... 6 பேர் படுகாயம்!!

சுருக்கம்

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 6 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 6 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், அருண் குமார், மாதவன், காசி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த மக்னா யானை பிடிபட்டது

இதில் 6 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். இதை அடுத்து ரத்த கட்டுக்கள் மற்றும் எலும்பு முறிவுடன் கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொரையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து 6 மீனவர்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்... அதிரடி உத்தரவு பிறப்பித்தது தமிழ அரசு!!

மேலும் இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்துக் கொண்டு தங்களை கொடூரமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்