லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து - 6 பேர் ஸ்பாட் -அவுட்...!

Asianet News Tamil  
Published : Nov 17, 2017, 09:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து - 6 பேர் ஸ்பாட் -அவுட்...!

சுருக்கம்

Six people were killed in a crash on the national highway near Erode.

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில்  6 பேர்  சமபவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பவானி செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி ஒன்று சாலை நடுவே உள்ள செடிகளுக்கு இன்று மதியம் 12 மணி அளவில் தண்ணீர் ஊற்றி கொண்டு நகர்ந்து சென்றது. 

அப்போது கோவையில் இருந்து சேலம் செல்லும் விரைவு அரசு பேருந்து வேகமாக சென்று  கொண்டிருந்தது. இதில் லாரி அருகே வரும்போது, அரசு பேருந்து நிலை தடுமாறி லாரியில் பின்புறத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!
சென்னை டூ ராமேஸ்வரம் புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு குட் நியூஸ்! முழு விவரம் இதோ!