பிரச்சாரம் வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை என எந்தவித நிகழ்ச்சிக்கும் பாமகவை பாஜக மாநில தலைமையோ, வேட்பாளரோ அழைக்கவில்லையென கோவை மாவட்ட பாமக சார்பாக தெரிவிக்கப்பட்டது.
கோவை பாஜக வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சார பணிகளில் இருந்து பாமக விலகுவதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடுகிறது. இன்னும் தேர்தலுக்கு 6 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பிரச்சாரம் வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை என எந்தவித நிகழ்ச்சிக்கும் பாமகவை பாஜக மாநில தலைமையோ, வேட்பாளரோ அழைக்கவில்லையென கோவை மாவட்ட பாமக சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்காகவே பிறந்த கட்சி திமுக; அண்ணாமலை கடும் விமர்சனம்
இதுதொடர்பாக கோவை மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் வெளியிட்டது போல அறிக்கை ஒன்று வெளியானது. அதில், கோவை தொகுதி வேட்பாளரின் வேட்பு மனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கும் பாமகவை அழைக்கவில்லை. கூட்டணி தர்மம் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம். ஆகையால் கோவை பாமக தேர்தல் பணிகளில் இருந்து மிகுந்த மனவருத்தத்துடன் வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கோவையில் தேர்தல் பணிகளில் இருந்து பாமக விலகுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: PMK vs BJP:கண்டுகொள்ளாத பாஜக..கோவை பிரச்சாரத்தில் இருந்து மன வருத்தத்தோடு வெளியேறுகிறோம்-பாமக திடீர் அறிவிப்பு
இதுகுறித்து கோவை மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நான் கோவை ராஜ் என்கிற ராஜகோபால், நான் சொன்னதாக சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் வரும் செய்திகள் தவறானவை என்றும், வாட்ஸ்அப் தகவல் வைத்து அதை செய்தியாக்கி வெளியிட்டு உள்ளனர் என்றும் NDA கூட்டணி சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கோவை பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.