ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து சாந்தா ஷீலா நாயரும் ராஜினமா - என்னதான் நடக்குது???

First Published Feb 7, 2017, 12:30 PM IST
Highlights


முதலமைச்சரின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட் ராமன், ராமலிங்கம் என அடுத்தடுத்து அதிகாரிகள் பதவி விலகி  வருவது தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா நியமிக்கப்பட்டும் அவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.

கடந்த வாரம் அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களாக இருந்த வெங்கட் ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவியிலிருந்து விலகினர்.

இந்நிலையில்  மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் பதவியில் இருந்த சாந்தா ஷீலா நாயர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கவனிக்கும் தனி அதிகாரியாக அவரை ஜெயலலிதா நியமித்தார்.

இதையடுத்து சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள், 110 விதியின் தீழ் தயாரிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை சாந்தா ஷீலா நாயர் கவனித்து வந்தார்.

தற்போது அந்த பதவியில் இருந்து தான் சாந்தா ஷீலா நாயர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



அரசு ஊழியர் பென்ஷன் பிரச்னையை கவனிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவிலும் சாந்தா ஷீலா நாயர் இடம் பெற்று இருந்தார்.  தொடர்ந்து அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் பதவி விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!