தமிழக, கர்நாடக எல்லையில் எரிந்த நிலையில் இளைஞர் பிணம்…

Asianet News Tamil  
Published : Feb 07, 2017, 09:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தமிழக, கர்நாடக எல்லையில் எரிந்த நிலையில் இளைஞர் பிணம்…

சுருக்கம்

திருப்பூர்

தமி​ழக - கர்​நா​டக எல்​லை​யில் எரிந்த நிலை​யில் இளைஞரின் பிணம் ஒன்று கிடந்தது.

தமி​ழக - கர்​நா​டக எல்​ல​யான கேர்​மா​ளம் வனத்​தில் உடல் எரிந்த நிலை​யில் இளை​ஞர் சடலம் கிடப்​பதை பார்த்தவர்கள் இரு மாநில காவலாளர்களுக்கும் தக​வல் அளித்தனர்.

இந்த தகவலைத் தொடர்ந்து, அப்​ப​கு​திக்​குச் சென்ற கர்​நா​டக காவலாளர்கள்,​​ உயிரிழந்தவரின் உடலைக் கைப்​பற்றி விசா​ரித்​த​னர்.​

அவர் எந்த ஊரைச் சேர்ந்​த​வர் என்றும்,​​ முன் விரோ​தம் கார​ண​மாக கொலை செய்யப்பட்டாரா? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இங்கு கொண்டுவந்து போடப்பட்டுள்ளாரா? என்ற கோணங்களில் இரு​மா​நில காவலாளர்களும் விசா​ரித்து வருகின்றனர்.​ ​

இச்​சம்​ப​வம் குறித்து,​​ கர்​நா​டக மாநில இராமா​பு​ரம் காவலாளர்கள் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

 

PREV
click me!

Recommended Stories

TVK Vijay: ரூ.5,000 கோடி பேரம் தோல்வி?! அமித்ஷாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய்.! தளபதி முடிவால் கொதிக்கும் டெல்லி!
அலுவலகத்தை காலி செய்யும் தவெக.. ஆதவுக்கு செக் வைக்கும் மாமனார்..! பின்னணியில் திமுக?