
பல குழந்தைகளுக்கு படிக்க உதவி
தமிழக பாஜக முன்னாள் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது நமோ வாசவி பவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இவர் செய்து வரும் சேவைகளால் பல்லாயிரக்கணக்கான பேர் பயனடைந்து வருகின்றனர். நமோ மீல் NaMo Meal திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு ஒரு வேளை வயிறார உணவளித்தும், நமோ குருகுலம் NaMo Gurukulam மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வியறிவு பெறவும் உதவி செய்து வருகிறார். கற்க கசடற என்ற திட்டத்தின் கீழ் பல குழந்தைகளுக்கு படிக்க உதவி வருகிறார்.
மகள் உயிரிழப்பு பெற்றோர் கண்ணீர்
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மட்டுமின்றி இலங்கை தமிழர் முகாம்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார். அதுமட்டுமின்றி தன்னிடம் உதவி என யார் கோரினாலும், சற்றும் தாமதிக்காமல் உதவி செய்யக்கூடியவர். கடந்த வாரம் வியட்நாமிற்கு பயணம் சென்ற தம்பதி ஒருவருடைய 5 வயது மகள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அந்த நாட்டில் இருந்த கட்டுப்பாடுகள் மற்றும் தடையால் சிறுமியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர முடியாமல் பெற்றோர் கண்ணீர் மல்க தவித்துள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்ட அண்ணாமலை
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட எஸ்.ஜி.சூர்யா உடனடியாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையைத் தொடர்பு கொண்டு, அந்த பெற்றோர் படும் துயரத்தை எடுத்துரைத்தார். அத்துடன் சிறுமியின் உடலை இந்தியா கொண்டு வர உதவும் படி கோரிக்கை விடுத்தார். உடனே வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்ட அண்ணாமலை, சிறுமியின் உடலை வியட்நாமில் இருந்து கொண்டு வர விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர்.
குவியும் பாராட்டு
எஸ்.ஜி. சூர்யா மேற்கொண்ட நடவடிக்கையின் மூலமாக சிறுமியின் உடல் அவரது வீட்டிற்கு வந்தடைந்துள்ளது. பெற்ற மகளை பறிகொடுத்த சோகத்தை விட அவளது உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வர முடியாமல் தவித்த பெற்றோர், இப்போது நல்லமுறையில் இறுதிச்சடங்கு செய்ததை எண்ணி எஸ்.ஜி.சூர்யாவிற்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.