Latest Videos

ஆதாரத்துடன் திமுக எம்.பி.க்கு டேக் செய்த SG சூர்யா.. ஆக்ஷன் எடுப்பதாக ரிப்ளை கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்!

By vinoth kumarFirst Published Jun 20, 2024, 2:04 PM IST
Highlights

எதிர்க்கட்சியினர் தொடங்கி சாமானிய மக்கள் வரை சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களிடம் தங்களது குறைகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். 

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிற்கு அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பார்க்க மணிக்கணக்கில் ஆபீஸ் வாசலில் காத்திருந்ததும், கார் பின்னாடி ஓடி, ஓடி மனு கொடுத்ததும் மலையேறி போச்சி. இப்போது எதிர்க்கட்சியினர் தொடங்கி சாமானிய மக்கள் வரை சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களிடம் தங்களது குறைகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு சம்பந்தப்பட்டவர்களும் வெறும் பதில் மட்டும் சொல்லாமல், கட்டாயம் ஆக்‌ஷன் எடுத்தே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

இதையும் படிங்க: Annamalai : கள்ளச்சாரயத்தால் 60 பேர் பலி!! இனியும் முதலமைச்சராக ஸ்டாலின் தொடர்வதா.?களத்தில் இறங்கும் அண்ணாமலை

அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எக்ஸ் தளத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிற்கு அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறிதளவு மழைக்கே தென் சென்னை சாலைகளில் ஏற்படும் சேதங்களுக்கு அளவு கிடையாது. சாலை முழுவதும் மழை நீர் தேங்குவதோடு, குண்டு குழியுமான பள்ளங்களால் மக்கள் பயணிக்க முடியாமல் அவதிப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, அதை அந்த தொகுதி எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் டேக் செய்திருந்தார். 

இதையும் படிங்க:  படுபாவிங்க என்னத்த கலந்தாங்கன்னே தெரியலயே! எங்களை அனாதையா விட்டுட்டு போயிட்டியே! கதறும் கள்ளக்குறிச்சி பெண்கள்

எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் தள பதிவில், “தென்சென்னை தொகுதிக்குப்பட்ட பெரும்பாக்கம் மக்களின் துயரங்களுக்கு முடிவே இல்லை. குளோபல் ஹாஸ்பிட்டல் சாலை எப்போதுமே பரிதாபகரமானதாகவே உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அங்கு ஒரு  மாடு வேறு இறந்துள்ளது” என பதிவிட்டதோடு, அதனை சோழிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு டேக் செய்துள்ளார். 

No end to the woes of Perumbakkam residents. Global Hospital Road has always been pathetic & with last 2 days rain it has worsened. A cow died there today too.

Sholinganallur DMK MLA & South Chennai DMK MP no where to be seen. pic.twitter.com/aYuhhVTkkf

— Dr.SG Suryah (@SuryahSG)

 

எஸ்.ஜி.சூர்யாவின் ட்வீட்டிற்கு உடனே பதிலளித்துள்ள திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும்,  ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார் என்றும் பதிலளித்துள்ளார். 

 

Thank you for your response madam . We eagerly look forward for your swift action. Thousands of Perumbakkam residents are suffering every single day, the suffering gets worst whenever it rains. https://t.co/J5IQ5GHma7

— Dr.SG Suryah (@SuryahSG)

 

தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த உடனடி பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள எஸ்.ஜி.சூர்யா, விரைவான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அவதிப்படுவதையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

click me!