கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஐ கடந்துள்ள நிலையில், இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், மதுவிற்கு எதிராக 45 ஆண்டுகாலமாக தான் போராடி வருகிறேன். கூட்டணி இல்லாமல் 2016ல் தனியாக நின்றபோது ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் தமிழகத்தை உருவாக்குவோம் என தெரிவித்தோம். கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு கொடுமை என்பதால் இதற்கு தமிழக முதலைமச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். விஷ சாராய உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தினை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையும், தமிழக அரசும் செயலிழந்துள்ளது.
மரக்காணம் உயிரழப்பிற்கு பிறகாவது தமிழக அரசு விழித்து கொண்டிருக்க வேண்டும். தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று கூடுவதால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி உயிரிழப்பு கள்ளச்சாராயம் இல்லை என கூறினார். அதன் பிறகு அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு கள்ளச்சாராயம் என தமிழக அரசு ஒத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை. கள்ளச்சாராயம் மட்டுமல்ல, டாஸ்மாக் மதுவினால் மக்கள் இறந்து வருகின்றனர்.
undefined
இந்த கூட்டத்தொடரில் முழு மதுவிலக்கை கொண்டு வர அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசே இதனை நடத்தலாம். ஆனால் மத்திய அரசு தான் நடத்த வேண்டுமென மீண்டும் மீண்டும் தமிழக அரசு கூறி வருகிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்
ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மகளிர் உரிமை தொகை வழங்காமல், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை வழங்கபட்டது. அதனை படிப்படியாக நிறுத்த போவதாக அறிவிப்புகள் வருகின்றன. மகளிர் உரிமை தொகை வழங்கபட்ட வீடுகளில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வருவதால் மகளிர் உரிமை தொகை நிறுத்தினால் பாமக போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரித்துள்ளனர்.
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் ஓயாத மரண ஓலம்; சாராய விற்பனையில் ஈடுபட்ட மூவர் அதிரடி கைது
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் அப்படி மின் கட்டணம் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக காவல் துறை மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல. கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு ஆளும் கட்சியில் முழுமையான ஆதரவு கிடைக்கிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் விடுதலை செய்ய கூறுவதாகவும் சாராய விற்பனைக்கும் திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என குற்றஞ்சாட்டினார்.
மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி, பொறுப்பு அமைச்சர் ஏ வ வேலு, முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பிற்கு பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு வேண்டும். கள்ளச்சாராயம், கஞ்சா போதை விற்பனையில் தமிழகம் தள்ளாடுவதாகவும் மக்கள் சீரழிகிறார்கள் என்று கூறினார்.
மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டினை அரசே நடத்த வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு பணியாற்றும் 592 தொழிலாளர்களுக்கு இரண்டு லட்சத்து 92 ஆயிரம் இழப்பீடு அறுவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் வழங்க வேண்டும். அரசே தேயிலை தோட்டத்தினை ஏற்று நடத்தவில்லை என்றால் தொழிலாளர்களு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். நீட் தேர்வில் கடுமையான முறைகேடு நடந்த குற்றஞ்சாட்டிற்கு 2024 ல் நடைபெற்ற நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ரேஷன் கடைதாரர்களுக்கு பாருப்பு, பாமாயில், வழங்கப்படாமல் உள்ளதால் அது குறித்த விளக்கத்தை வெளியிடாமல் அரசு உள்ளதால் விளக்கமளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தான் அடுத்த வாரம் முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும். திமுக மீதுள்ள கோபத்தை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் காட்டுவார்கள். அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்பொழுதுமான தேர்தல் அல்ல. மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற திமுகவிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். திமுகவை வீழ்த்துக்கிற வேலையை அதிமுகவினர் செய்வார்கள் என நம்புவதாக ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்னு சேரவேண்டும், என்றும் திமுகவை வீழ்த்த வேண்டுமென மக்கள் கோவத்தில் உள்ளதாகவும் அமைச்சர்கள் அவர்களது வேலையை கோட்டையிலிருந்து செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.