செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Published : Aug 27, 2022, 06:52 PM IST
செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

சுருக்கம்

வரும் செப்டம்பர் 8ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் பல்வேறு திருவிழாக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

இந்த நிலையில், கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் ஆகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.  10 நாட்கள் வண்ணப் பூக்களை கொண்டு வெகு விமர்சையாக ஓணம் கொண்டாடப்படும் . இந்தாண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட ஓணம் இருக்கிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 08.09.2022 தேதி வியாழன்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் ஆஃபர்..! 50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் !!

உள்ளூர் விடுமுறை நாளான 08.09.2022 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Updates 07 December 2025 : கோவா தீ விபத்து முதல் தேர்தல் ஆணையம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்
தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!