செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளதால், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 163 மற்றும் 164 குறித்து விவாதம் தொடங்கியுள்ளது.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 163 மற்றும் 164 குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்த ஆளுநர், அவர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
ஆளுநருக்கு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க அதிகாரம் கிடையாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநரிட் உத்தரவு சிறுபிள்ளைத் தனமானது எனவும் அவர் தனது கடமையை உணர்ந்து நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
undefined
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆன்.என்.ரவி அதிரடி உத்தரவு
தலைவர்கள் கண்டனம்:
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் கூறியுள்ளனர். ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் ஆகியோர் ஆளுநர் ரவியைக் கண்டித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
"செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்ததே மு.க.ஸ்டாலின்தான்;இதை அவர் மறந்துவிடுகிறார். இப்போது வெற்றி அடைந்திருப்பது ஸ்டாலின்தான். இது அதிமுக, பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும்" என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?
முதல்வர் பரிந்துரை செய்யாமல் அமைச்சர் ஒருவரை ஆளுநரே நீக்குவது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு சட்டத்தில் இடம் இருப்பதாக அதிமுக மூத்த தலைவர் செம்மலை கூறியுள்ளார். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளன.
இந்நிலையில், ஆளுநர் இவ்வாறு தன்னிச்சையாக செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கியது சரியா? அதற்கு சட்டரீதியான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற விவாதம் எழுந்துள்ளது. விசிக எம்.பி. ரவிக்குமார், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநருக்கான அதிகாரம் குறித்த தெளிவின்மையைத் தீர்த்து வைக்க வேண்டிய நேரம் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதம்... அதிகாரம் இல்லை: திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
சட்டப்பிரிவு 163, 164:
அரசியலமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவில் முதல்வர் தலைமையிலான மாநில அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்றே ஆளுநர் செயல்பட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில்தான் அமைச்சர்களை நியமிக்கலாம் எனவும் முதல்வர் பரிந்துரை செய்யாமல் அமைச்சரவையில் இருந்து யாரையும் நீக்கவோ, சேர்க்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 163, 164 கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாலேயே அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ பதவியில் இருக்கத் தகுதியானவர் அல்ல என்று ஆளுநர் உத்தரவிட முடியாது. நீதிமன்றத்தில் தண்டனை பெறும் பட்சத்தில் தகுதிநீக்கம் செய்யப்படலாம். இந்நிலையில் ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆளுநரின் உத்தரவு மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி! வானதி சீனிவாசன் பேட்டி
உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடைகோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை தான் விரும்பவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள நிலையில், அவர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதமானது என ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 164(1) இன் கீழ் முதல்வரின் ஆலோசனையின் பேரில்தான் ஆளுநர் அமைச்சரை நியமித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டியது. மேலும், ஆளுநர் முதல்வருக்கு தனது பரிந்துரைகளை வழங்க சுதந்திரம் உண்டு என்றாலும், 164வது பிரிவின் கீழ் ஆளுநர் ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியது.
பின்னர், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, எந்த உத்தரவும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்த கிழவர்... வீடியோ எடுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த மகன்!