
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி சில மணி நேரத்துக்கு முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜி மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் அனல் பறந்து வரும் இந்த நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பை நேரலையில் காண இந்த லிங்கை கிளிக் செய்து காணலாம்.